Dailyhunt
"சம்பளம் கேட்டதற்காக ஒரு பெண்ணை இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவது கண்டிக்கத்தக்கது". பரேலியில் பயங்கரம்..!!!

"சம்பளம் கேட்டதற்காக ஒரு பெண்ணை இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவது கண்டிக்கத்தக்கது". பரேலியில் பயங்கரம்..!!!

த்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் வீட்டு வேலை செய்ததற்கான நிலுவை ஊதியத்தைக் கேட்கச் சென்ற பெண் ஒருவர், வீட்டு உரிமையாளரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நாட்களாக வழங்கப்படாத சம்பளத்தைப் பெற்று வருவதற்காக அந்தப் பெண் தனது தாயுடன் சென்றபோது, வீட்டு உரிமையாளர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த உரிமையாளர் அப்பெண்ணைத் தரதரவென இழுத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

">

இந்தக் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதனால் "சம்பளம் கேட்டதற்காக ஒரு பெண்ணை இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் தாக்குவது கண்டிக்கத்தக்கது" என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தலைமறைவாக உள்ள குற்றவாளியைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உழைப்பிற்கான ஊதியத்தைக் கேட்டதற்கு வன்முறை ஏவப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai