Dailyhunt
"சம்பளத்துக்காக மட்டும் தான் வர்றோம்.. மத்தபடி ஒரு பிணைப்பும் இல்ல" இந்தியாவை ஆக்கிரமிக்கும் 'Quiet Quitting' கலாச்சாரம்.. அதிர்ச்சியில் நிறுவனங்கள்..!!

"சம்பளத்துக்காக மட்டும் தான் வர்றோம்.. மத்தபடி ஒரு பிணைப்பும் இல்ல" இந்தியாவை ஆக்கிரமிக்கும் 'Quiet Quitting' கலாச்சாரம்.. அதிர்ச்சியில் நிறுவனங்கள்..!!

ர்வதேச ஆய்வு நிறுவனமான கேலப் (Gallup) வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டிற்கான உலகளாவிய பணியிட அறிக்கை, இந்திய ஊழியர்களின் மனநிலை குறித்து மிகவும் கவலையளிக்கும் தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில், குறிப்பாக இந்தியாவில், ஊழியர்களுக்கும் அவர்கள் செய்யும் வேலைக்கும் இடையிலான உளவியல் ரீதியான பிணைப்பு (Engagement) பெருமளவு குறைந்துள்ளதைக் காட்டுகிறது.

குறிப்பாக, 'குவைட் குவிட்டிங்' (Quiet Quitting) எனப்படும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத் தாண்டி எந்த கூடுதல் முயற்சியும் எடுக்காமல், ஒரு இயந்திரம் போல வேலை செய்யும் போக்கு இந்திய ஊழியர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த ஆய்வின் படி, உலகிலேயே இந்திய ஊழியர்கள் தான் அதிக அளவு தினசரி சோகத்தையும் (36%), கோபத்தையும் (31%) அனுபவிப்பதாகத் தெரியவந்துள்ளது.

வெறும் 16% ஊழியர்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் மட்டுமல்லாமல், மேனேஜர் பொறுப்பில் இருப்பவர்களிடமும் வேலையில் இருந்த ஆர்வம் கடந்த ஆண்டை விட 8% சரிந்துள்ளது. "சரியான மேனேஜர்கள் இல்லாததும், அளவுக்கு அதிகமான வேலைப்பளுவுமே" இந்த நிலைக்குக் காரணம் என ஆய்வு தெரிவிக்கிறது. இந்தத் தொய்வு நிறுவனங்களின் லாபத்தைப் பாதிப்பதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பின்னுக்குத் தள்ளும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai