Dailyhunt
"செத்துப்போனாலும் இவங்க வீட்டை விட்டு போகமாட்டாங்க" பிணத்துடன் வாழும் விசித்திர மனிதர்கள்.. நடுக்கம் தரும் வினோத பழக்கம்..!!

"செத்துப்போனாலும் இவங்க வீட்டை விட்டு போகமாட்டாங்க" பிணத்துடன் வாழும் விசித்திர மனிதர்கள்.. நடுக்கம் தரும் வினோத பழக்கம்..!!

ந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் வாழும் 'தோராஜா' (Toraja) இன மக்களின் பாரம்பரியம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக ஒருவர் இறந்தால் உடனடியாக உடல் அடக்கம் செய்யப்படும், ஆனால் இவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்கள் இறந்தாலும் அவர்களை உடனே புதைப்பதில்லை. மாறாக, பல ஆண்டுகளாக அந்த சடலத்தை தங்கள் வீட்டின் லிவிங் ரூமிலேயே வைத்துப் பராமரிக்கிறார்கள். இறந்தவரை பிணமாகக் கருதாமல், அவர் வெறும் 'நோய்வாய்ப்பட்டவர்' என்று நம்பும் இவர்கள், அவருக்கு தினமும் பிடித்த உணவுகளை வழங்குவதோடு, அவரோடு உரையாடவும் செய்கிறார்கள்.

​அந்த சடலத்திற்குப் புத்தாடை அணிவித்து, ஒரு படுக்கையில் கிடத்தி, மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். கெமிக்கல் உதவியுடன் பல வருடங்கள் இந்த சடலங்கள் பாதுகாக்கப்படுகின்றன. வீட்டில் வளரும் குழந்தைகள் கூட இந்த பிணங்களுடன் எவ்வித அச்சமுமின்றி விளையாடி வளர்கிறார்கள். பல ஆண்டுகள் கழித்து, குடும்பத்தினர் போதுமான பணம் சேர்த்து, உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த பிறகுதான் பிரம்மாண்டமான விழா நடத்தி அந்த உடலை மலை குகைகளில் அடக்கம் செய்கிறார்கள். இந்த விசித்திரப் பழக்கம் நமக்கு பயத்தைத் தந்தாலும், அவர்களுக்கு அது தங்கள் பிரியமானவர்களிடம் காட்டும் அன்பின் உச்சமாகத் திகழ்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai