Dailyhunt
ஷாக் நியூஸ்.. நடிகையிடம் அத்துமீறிய ரஞ்சித்துக்கு ரெட் கார்டு?. தொழிலாளர் சம்மேளனம் போட்ட அதிரடி தடை. திடுக்கிடும் உண்மைகள்.!!!

ஷாக் நியூஸ்.. நடிகையிடம் அத்துமீறிய ரஞ்சித்துக்கு ரெட் கார்டு?. தொழிலாளர் சம்மேளனம் போட்ட அதிரடி தடை. திடுக்கிடும் உண்மைகள்.!!!

சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாலியல் புகார் விவகாரத்தில், இயக்குனர் ரஞ்சித் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடிகை ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான 'பெப்சி' அமைப்பில் இருந்து அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. திரையுலகில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இதனால் தொழிலாளர் சம்மேளனத்தின் இந்த முடிவால், ரஞ்சித் இனி திரைப்படப் பணிகளில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்புகார் குறித்து உரிய விளக்கம் அளிக்கும் வரை அல்லது விசாரணை முழுமையாக முடியும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிகிறது. இந்தச் சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் தார்மீக ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்த புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai