இந்தியாவில் நிலவும் எல்பிஜி (LPG) தேவை மற்றும் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், 47,000 டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு 'பைன் கேஸ்' (Pyxis Gas) என்ற பிரம்மாண்ட டேங்கர் கப்பல் இன்று விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.
இந்த வருகையைத் தொடர்ந்து, நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை விரைவுபடுத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த மெகா வரவால், வரும் காலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், 'ஜக் வசந்த்' (Jag Vasant) என்ற மற்றொரு எல்பிஜி சரக்குக் கப்பலும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (UAE) இந்தியா நோக்கிப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து வரும் இந்தக் கப்பல்களால் சிலிண்டர் தட்டுப்பாடு முற்றிலுமாக நீங்கும் என நம்பப்படுகிறது.

