Dailyhunt
"சினிமாவே வேணாம்.. ரிஷிகேஷ் போயிட்டேன்!". வீடியோ எடுத்து பிளாக்மெயில்.. பாடகிக்கு ஆதரவாக ஜேம்ஸ் வசந்தன்.. கோலிவுட்டில் மீண்டும் ஒரு 'மீ டூ' புயல்..!!

"சினிமாவே வேணாம்.. ரிஷிகேஷ் போயிட்டேன்!". வீடியோ எடுத்து பிளாக்மெயில்.. பாடகிக்கு ஆதரவாக ஜேம்ஸ் வசந்தன்.. கோலிவுட்டில் மீண்டும் ஒரு 'மீ டூ' புயல்..!!

மிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி பிரபலமான பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், ஒரு முன்னணி இசையமைப்பாளர் மீது சுமத்தியுள்ள பாலியல் புகார் திரையுலகையே அதிர வைத்துள்ளது.

"தன்னிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய அந்த இசையமைப்பாளர், ஒருநாள் தனது ஸ்டூடியோவிலேயே வைத்து என்னைப் பாலியல் பலாத்காரம் செய்தார். அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு, வெளியே சொன்னால் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டினார்" என உருக்கமாகப் பேசியுள்ளார்.

இந்த மிரட்டலால் மனமுடைந்து சினிமாவை விட்டே விலகி, தற்போது ரிஷிகேஷில் சொந்தத் தொழில் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாடகி ஸ்வாகதாவுக்கு ஆதரவாகப் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் களமிறங்கியுள்ளார். "அந்த இசையமைப்பாளரின் காம வேட்டை இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல இளம் பெண்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்வாகதா கொடுத்த ஆதாரங்களே போதுமானது,

கமெண்ட் செக்‌ஷனிலேயே நெட்டிசன்கள் அவர் யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அந்த நபர் யார் என்பது வெளிச்சத்திற்கு வரவேண்டும். போலீஸ் நடவடிக்கை எடுத்தால் சில நிமிடங்களிலேயே அந்த காம வேட்டைக்காரனைப் பிடித்துவிடலாம்" என ஜேம்ஸ் வசந்தன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். சினிமாவை உலுக்கி வரும் இந்த 'மீ டூ' விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக் ஆக மாறியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai