Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிரிப்பை அடக்க முடியல..! "2 சிங்கங்கள் வந்தும் அசராத காளை". அசால்டாக மாடு செஞ்ச அந்த காரியம்.. தலை தெறிக்க ஓடிய காட்டு ராஜாக்கள். இது ரீல் இல்ல ரியல். கலக்கல் வீடியோ..!

சிரிப்பை அடக்க முடியல..! "2 சிங்கங்கள் வந்தும் அசராத காளை". அசால்டாக மாடு செஞ்ச அந்த காரியம்.. தலை தெறிக்க ஓடிய காட்டு ராஜாக்கள். இது ரீல் இல்ல ரியல். கலக்கல் வீடியோ..!

ன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் சிங்கங்கள் காட்டின் ராஜாவாக வலம் வருவதையும், கண் இமைக்கும் நேரத்தில் இரையை வேட்டையாடுவதையும் நாம் அடிக்கடி பார்த்திருப்போம்.

ஆனால், குஜராத்தின் கிர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நள்ளிரவில் நடந்த வினோதமான சம்பவம், பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. அங்குள்ள ஒரு சாலை ஓரத்தில் காளை மாடு ஒன்று மிக அமைதியாக அமர்ந்திருந்தது. அப்போது அதன் பின்னால் இரண்டு சிங்கங்கள் வேட்டையாடுவதற்காக மிகவும் ரகசியமாக, பதுங்கி பதுங்கி வந்து நின்றன. சிங்கங்கள் மிக அருகில், அதாவது தலைமாட்டிலேயே வந்து நின்றபோதிலும், அந்த காளை மாடு எந்தவித சலனமும் இல்லாமல் தன் பாட்டிற்கு நிதானமாக அமர்ந்திருந்தது.

ஆனால், அடுத்த நொடி யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் அரங்கேறியது. தன்னை சுற்றியும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், எந்த பயமும் இன்றி அந்த காளை மாடு சாவகாசமாக எழ முயன்றது. அதன் இந்த அசால்ட்டான ரியாக்‌ஷனைப் பார்த்து பயந்துபோன அந்த இரண்டு சிங்கங்களும், திடீரென பின்வாங்கி தலைதெறிக்க ஓடத் தொடங்கின. சிங்கங்கள் தூர ஓடிய பிறகுதான் அந்த காளையே முழுமையாக ஆக்டிவ் ஆகி, சிங்கங்களுக்கு சவால் விடுவது போல கம்பீரமாக போஸ் கொடுத்தது. சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வேடிக்கையான வீடியோவை இதுவரை 29 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பார்த்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும், "இந்த காளை ரியாக்ட் செய்ய 7 வொர்க்கிங் டேஸ் எடுத்துக்கொண்டது போல", "இவர்கள் குஜராத்தி சிங்கங்கள், வேட்டையாட மாட்டார்கள், பாப்டா மற்றும் டோக்லாதான் சாப்பிடுவார்கள்" என கமெண்ட் செக்ஷனில் செம ரகளையாக கிண்டலடித்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai