Dailyhunt
"ஸ்கெட்ச் போட்டு முடிச்சிட்டாங்க!" - சுவேந்து அதிகாரியின் பிஏ சுட்டுக்கொலை. வங்காளத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்த கையோடு நடந்த பயங்கரம்..!!

"ஸ்கெட்ச் போட்டு முடிச்சிட்டாங்க!" - சுவேந்து அதிகாரியின் பிஏ சுட்டுக்கொலை. வங்காளத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்த கையோடு நடந்த பயங்கரம்..!!

மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக பாஜக வென்று ஆட்சியைப் பிடித்துள்ள வரலாற்றுச் சாதனைக்கு மத்தியிலும், அங்கு தேர்தல் பிந்தைய வன்முறை உச்சகட்ட பதற்றத்தைக் கிளப்பியுள்ளது.

மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் மத்தியம்கிராம் தோல்தலா பகுதியில், பாஜகவின் முக்கிய முகமும் அடுத்த முதலமைச்சர் ரேஸில் முன்னணியில் இருக்கும் சுவேந்து அதிகாரியின் தனிச் செயலாளரான சந்திரநாத் ரத், சொகுசு காரில் சென்றுகொண்டிருந்தபோது பைக்கில் வந்த மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காரின் கண்ணாடியை இறக்கச் சொல்லி, நெஞ்சிலும் வயிற்றிலும் பாயும் அளவுக்குப் பாயிண்ட் பிளாங்க் ரேஞ்சில் சுடப்பட்ட சந்திரநாத் ரத், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை "பக்கா ஸ்கெட்ச் போட்டு நடத்தப்பட்ட கொடூரமான கொலை!" என்று மிகக் கடுமையாகக் கண்டித்துள்ள சுவேந்து அதிகாரி, தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடுவதற்கு முன்பே பக்காவாக திட்டமிட்டு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சியைப் பிடித்த குஷியில் இருந்த பாஜக கூடாரத்தையே இந்தச் சம்பவம் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai