Dailyhunt
தல-க்கு இதெல்லாம் பிடிக்காது போல. பிரெவிஷ் தலையில் முட்டையை உடைத்த CSK வீரர்கள். முட்டை அபிஷேகத்தால் முகம் சுளித்த தோனி. இணையத்தை ஆக்கிரமித்த ரியாக்ஷன்.!!

தல-க்கு இதெல்லாம் பிடிக்காது போல. பிரெவிஷ் தலையில் முட்டையை உடைத்த CSK வீரர்கள். முட்டை அபிஷேகத்தால் முகம் சுளித்த தோனி. இணையத்தை ஆக்கிரமித்த ரியாக்ஷன்.!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர பேட்டர் டெவால்ட் பிரெவிஸின் 23-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, எம்.எஸ்.தோனி காட்டிய விசித்திரமான ரியாக்ஷன் சமூக வலைதளங்களில் ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்து வருகிறது.

தென்னாப்பிரிக்காவின் 'பேபி ஏபி' என்று அழைக்கப்படும் டெவால்ட் பிரெவிஸ், ஏப்ரல் 29 அன்று தனது 23-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடினர். அப்போது கேக் வெட்டியவுடன், வீரர் கார்த்திக் சர்மா திடீரென பிரெவிஸின் தலையில் முட்டையை உடைத்துத் தேய்த்தார்.

கையில் தட்டுடன் அருகில் நின்றுகொண்டிருந்த எம்.எஸ்.தோனி, இந்த 'முட்டை அபிஷேகத்தைப்' பார்த்ததும் ஒரு நொடி அருவருப்பில் முகம் சுளித்தார். அவருக்கு இதுபோன்ற கொண்டாட்டங்களில் பெரிய உடன்பாடில்லை என்பது அவரது முகபாவனையிலேயே அப்பட்டமாகத் தெரிந்தது. அவருக்குப் பின்னால் நின்றிருந்த சர்பராஸ் கான் இதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்க, தோனியின் அந்த 'அபூர்வ ரியாக்ஷன்' மட்டும் கேமராவில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2026 தொடரில் தசைப்பிடிப்பு காயம் காரணமாக எம்.எஸ்.தோனி தற்போது விளையாடும் லெவனில் இடம்பெறவில்லை. அவர் எப்போது மீண்டும் களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மற்றொரு பக்கம், காயத்திலிருந்து மீண்டு வந்த பிரெவிஸ் தனது பழைய அதிரடி ஃபார்மை மீட்கப் போராடி வருகிறார். மேலும் விளையாட்டில் பின்னடைவு இருந்தாலும், சிஎஸ்கே வீரர்களுக்கு இடையே உள்ள நட்பு மற்றும் கலகலப்பான சூழல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai