Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
​"தள்ளிப்போகும் அதிமுகவின் ரிசல்ட்" - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரின் திடீர் ஆப்சென்ட்.. திக் திக் நிமிடங்களில் எடப்பாடி கூடாரம்..!!

​"தள்ளிப்போகும் அதிமுகவின் ரிசல்ட்" - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரின் திடீர் ஆப்சென்ட்.. திக் திக் நிமிடங்களில் எடப்பாடி கூடாரம்..!!

மிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அதிமுக விவகாரத்தில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று தனது இறுதி முடிவை அறிவிப்பதாக இருந்த நிலை மாறி, தற்போது அந்த ரிசல்ட் தள்ளிப்போயுள்ளது.

பக்ரீத் பண்டிகை விடுமுறை காரணமாக சபாநாயகர் இன்று தலைமைச் செயலகத்திற்கு வரவில்லை என்றும், இதனால் இந்த விவகாரத்தில் இன்று எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவும் வெளியாக வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சபாநாயகரின் இந்த திடீர் ஆப்சென்ட், அடுத்த கட்ட ஆக்ஷனை எதிர்பார்த்து திக் திக் நிமிடங்களுடன் காத்திருந்த அதிமுகவினர் மத்தியில் தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

​இதற்கிடையே, தங்கள் மீது எந்தவித தகுதி நீக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என சபாநாயகரிடம் அதிமுகவினர் முறைப்படி கடிதம் அளித்துள்ளனர். முன்னதாக அதிமுகவின் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக மாறி மாறி அளித்து வந்த புகார்களை நேற்று திடீரென ஒட்டுமொத்தமாக வாபஸ் பெற்றுக்கொண்டு அனல் பறக்கும் ட்விஸ்ட் கொடுத்துள்ளனர். உட்கட்சி விவகாரம் மற்றும் தகுதி நீக்க பயம் காரணமாக இரு தரப்பும் பின்வாங்கியுள்ள சூழலில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எடுக்கப்போகும் அடுத்தகட்ட அதிரடி முடிவு என்னவாக இருக்கும் என்ற சஸ்பென்ஸ் தற்போதே அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai