தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வேளையில், பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
த.வெ.க-வின் வெற்றியை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ள அவர், "காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது, அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது" எனப் பதிவிட்டுள்ளார். தமிழக மக்கள் அரசியல் விழிப்புணர்வுடன் முடிவெடுக்காமல், சினிமா கவர்ச்சியில் விழுந்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தனது பதிவில் "அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான்; தொடர்ந்து பயணிப்போம்" எனக் கூறியுள்ள பிரகாஷ் ராஜ், வெற்றி பெற்றவர்களுக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழக அரசியலில் சினிமா மற்றும் அரசியல் குறித்த விவாதங்கள் அனல் பறந்து வரும் நிலையில், பிரகாஷ் ராஜின் இந்த "ரசிகர் மயம்" என்ற விமர்சனம் த.வெ.க தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

