Dailyhunt
தமிழகத்தில் 'தளபதி' சுனாமி! - 100 தொகுதிகளில் தவெக முன்னிலை! - திமுக, அதிமுக-வை ஓரம் கட்டிய விஜய்! - அதிருது கோட்டை..!!!

தமிழகத்தில் 'தளபதி' சுனாமி! - 100 தொகுதிகளில் தவெக முன்னிலை! - திமுக, அதிமுக-வை ஓரம் கட்டிய விஜய்! - அதிருது கோட்டை..!!!

மிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் சுனாமி இன்று உருவாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 3-வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

"விஜய் ஒரு சில இடங்களில் மட்டுமே வெல்வார்" என கணித்த அரசியல் விமர்சகர்களின் கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி, ஆளுங்கட்சியான திமுக-வையே (51 தொகுதிகள்) பின்னுக்குத் தள்ளி தவெக மிரட்டி வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 69 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், விஜய்யின் இந்த விஸ்வரூபம் அறிவாலய வட்டாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது.

திராவிடக் கட்சிகளின் பலத்த கோட்டையாகக் கருதப்பட்ட தொகுதிகளில் எல்லாம் 'வெற்றித் திலகம்' மின்னத் தொடங்கியுள்ளதால், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai