Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"தமிழகத்திலேயே முதல்முறை" - தாம்பரத்தில் களம் இறங்கிய அட்வான்ஸ் டெக்னாலஜி.. குப்பை லாரிகளுக்கு இனி 'ஃபுல் ஸ்டாப்'..!!

"தமிழகத்திலேயே முதல்முறை" - தாம்பரத்தில் களம் இறங்கிய அட்வான்ஸ் டெக்னாலஜி.. குப்பை லாரிகளுக்கு இனி 'ஃபுல் ஸ்டாப்'..!!

மிழகத்திலேயே முதல்முறையாக தாம்பரம் மாநகராட்சியில் கம்ப்ரஸர் இயந்திரம் மூலம் குப்பைகளை அழுத்தி, முழுவதும் மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லும் அதிரடியான புதிய தொழில்நுட்பம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நவீன திட்டத்தின் மூலம், நகரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் திறந்தவெளியில் கொண்டு செல்லப்படாமல், ராட்சத இயந்திரங்கள் மூலம் அழுத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் லாரிகளில் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் இந்த அதிரடி மற்றும் ஹைடெக் நடவடிக்கை, ஒட்டுமொத்த தமிழக அரசியல் மற்றும் உள்ளாட்சி நிர்வாக வட்டாரத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

​இந்த புதிய அட்வான்ஸ் டெக்னாலஜி குறித்து தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், குப்பைகளை லாரிகளில் ஏற்றிச்செல்லும் போது இனி பொதுமக்களுக்கு எந்தவித துர்நாற்றமும் வீசாது என்றும், சாலையில் குப்பைகள் சிந்தி கொட்டாமல் முழுவதும் மூடப்பட்ட கன்டெய்னர்கள் மூலமே பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக இருந்த குப்பை லாரி விவகாரத்திற்கு, இந்த அதிநவீன தொழில்நுட்பம் மூலம் மிகச்சிறந்த முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வாசகர்கள் மத்தியில் இந்த செய்தி செம வைரலாகி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai