Dailyhunt
"தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..?" வெளியான எக்ஸிட் போல் முடிவுகள்.. தலைவர்களை அதிரவைத்த திருப்பம்.. குழப்பத்தில் தமிழக அரசியல் கட்சிகள்.. மே 4-ல் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்..!!

"தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..?" வெளியான எக்ஸிட் போல் முடிவுகள்.. தலைவர்களை அதிரவைத்த திருப்பம்.. குழப்பத்தில் தமிழக அரசியல் கட்சிகள்.. மே 4-ல் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்..!!

மிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தல் மற்றும் கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலான நிறுவனங்கள் தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறினாலும், சில நிறுவனங்கள் அ.தி.மு.க மற்றும் த.வெ.க வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாறுபட்ட கருத்துக்கணிப்புகளால் அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே ஒருவித குழப்பமும் எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

தி.மு.க நிர்வாகிகள் தங்களின் வெற்றியை உறுதி என நம்பி வரும் வேளையில், அ.தி.மு.க மற்றும் புதிய வரவான த.வெ.க நிர்வாகிகளும் தாங்களே ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

தமிழக மக்களின் இறுதித் தீர்ப்பு என்ன என்பதும், எந்த நிறுவனத்தின் கணிப்பு துல்லியமானது என்பதும் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே முழுமையாகத் தெரியவரும். இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai