Dailyhunt
"தன் கார் டிரைவர் மகனை MLA ஆக்கிய விஜய்.. விருகம்பாக்கத்தில் நடந்த மிராக்கிள் வெற்றி.. திமுக, அதிமுக-வை கதறவிட்ட சபரிநாதன்.. தளபதியின் ரியல் பாசம்..!!"

"தன் கார் டிரைவர் மகனை MLA ஆக்கிய விஜய்.. விருகம்பாக்கத்தில் நடந்த மிராக்கிள் வெற்றி.. திமுக, அதிமுக-வை கதறவிட்ட சபரிநாதன்.. தளபதியின் ரியல் பாசம்..!!"

ளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் சட்டசபை தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து வரும் நிலையில், விருகம்பாக்கம் தொகுதியின் வெற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தன்னிடம் நீண்ட காலமாக கார் ஓட்டுநராகப் பணிபுரிபவரின் மகன் சபரிநாதனுக்கு விஜய் சீட் கொடுத்திருந்தார்.

அந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில், சபரிநாதன் 76,092 வாக்குகளைப் பெற்று, சுமார் 27,086 வாக்குகள் வித்தியாசத்தில் திமுuக மற்றும் அதிமுக வேட்பாளர்களை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார்.

இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா 49,006 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், அதிமுக வேட்பாளர் விருகை வி.என். ரவி 38,767 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். ஒரு சாதாரண கார் ஓட்டுநரின் மகனை எம்.எல்.ஏ-வாக்கிய விஜய்யின் இந்தச் செயல், தவெக தொண்டர்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாகத் தவெக உருவெடுத்துள்ள வேளையில், இந்த மனிதநேயமிக்க வெற்றி ஒரு சிறப்பான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai