Dailyhunt
"தங்கம் விலை அதலபாதாளத்திற்கு சரிந்தது!".. சவரனுக்கு ரூ.2,400 குறைந்ததால் நகைப்பிரியர்கள் குஷி.. இன்றைய லேட்டஸ்ட் ரேட்.!!!!

"தங்கம் விலை அதலபாதாளத்திற்கு சரிந்தது!".. சவரனுக்கு ரூ.2,400 குறைந்ததால் நகைப்பிரியர்கள் குஷி.. இன்றைய லேட்டஸ்ட் ரேட்.!!!!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது. இன்று காலையிலேயே சவரனுக்கு 800 ரூபாய் குறைந்த நிலையில், மாலை நேரத்தில் மேலும் ஒரு அதிரடியாக 1,600 ரூபாய் சரிந்துள்ளது.

இதன் மூலம் இன்று ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு மொத்தம் 2,400 ரூபாய் வரை குறைந்து நடுத்தர மக்களுக்குப் பெரிய ஆறுதலைக் கொடுத்துள்ளது.

இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, சென்னையில் தற்போது 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,750 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1.10 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் சரிவு நகைப்பிரியர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதால், நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai