Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

"தன்னை பத்தி யோசிக்கல.. அதுதாங்க மனிதநேயம்!".. மரணத்தை வென்ற ஒரு தந்தையின் அசாத்திய தைரியம்.. வைரலாகும் உருக வைக்கும் வீடியோ..!!

நேபாளத்தில் சமீபத்தில் தலைவிரித்தாடிய கோரமான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளுக்கு இடையில், சமூக வலைதளங்களில் ஒரு தந்தையின் தியாகம் தொடர்பான வீடியோ ஒன்று காண்போரை உருக வைத்துள்ளது.

கொந்தளித்து ஓடும் நதியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் ஆபத்தான கேபிள் பாலத்தின் மீது, ஒரு நபர் தனது உயிரைக் பற்றிக் கவலைப்படாமல் மறுபுறம் இருக்கும் குடும்பத்தினரைக் காப்பாற்றுவதற்காக மின்னல் வேகத்தில் ஓடும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. எப்போது வேண்டுமானாலும் குலைந்து விழக்கூடிய நிலையில் இருந்த அந்தப் பாலத்தைக் கடந்து அவர் தனது குடும்பத்தைச் சென்றடைந்த விதம் பலரது கண்களையும் கலங்க வைத்துள்ளது.

இந்தக் காட்சியைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோவாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர். ஆனால், இதுகுறித்து நடத்தப்பட்ட தீவிரத் தொழில்நுட்பப் பரிசோதனையில், இந்த வீடியோ எந்தவித எடிட்டிங்கும் இல்லாமல் நூறு சதவீதம் உண்மையானது என்பது உறுதியானது. வாழ்க்கையின் மிக ஆபத்தான தருணத்திலும் குடும்பத்தின் பாதுகாப்பே பெரிது என்று கருதி அந்தத் தந்தை காட்டிய அசாத்திய தைரியம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயற்கையின் கோரத் தாண்டவத்திற்கு நடுவே மனிதர்களின் பாசமும் பிடிவாதமும் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது என்பதை இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது. அந்த நபர் பாதுகாப்பாக மறு கரையை அடைந்தவுடன் முகத்தில் ஏற்பட்ட நிம்மதியான காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேபாளத்தில் நடந்துள்ள இந்தச் சோகச் சூழலில் மனிதநேயமும் பாசமும் கலந்த இந்த வைரல் வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai