தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அபார வெற்றி குறித்து சசிகலா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அலைகளை உருவாக்கியுள்ளது.
இன்று தவெக பெற்றிருக்கும் இந்த வெற்றி உண்மையில் அதிமுக பெற வேண்டிய வெற்றி என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் ஒருசில முக்கிய நபர்களின் சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலுமே அதிமுக இன்று இத்தகைய துரதிர்ஷ்டவசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என நேரடியாகவே எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சாடியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் இருந்தும், கோட்டையைப் பிடிக்க வேண்டிய அதிமுக இன்று பின்னடைவைச் சந்தித்திருப்பதற்குக் காரணம் கட்சியின் ஒற்றுமையின்மையே என்பதைத் தனது பதிவின் மூலம் சசிகலா சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அதிரடிப் பதிவு அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

