Dailyhunt
"தேமுதிகவுக்கு 'பிக் ஷாக்'!".. இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த விஜயகாந்த் விசுவாசி. தேர்தல் நேரத்தில் அதிரடி மாற்றம்..!!!!

"தேமுதிகவுக்கு 'பிக் ஷாக்'!".. இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த விஜயகாந்த் விசுவாசி. தேர்தல் நேரத்தில் அதிரடி மாற்றம்..!!!!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவில் நீண்டகாலமாக விஜயகாந்தின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட மீசை ராஜேந்திரன் அக்கட்சியில் இருந்து இன்று அதிரடியாக விலகியுள்ளார்.

கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட சில அதிருப்திகள் காரணமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படும் நிலையில், விலகிய சில மணி நேரங்களிலேயே அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை (EPS) நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

விஜயகாந்த் இருந்த காலம் முதலே கட்சியின் முக்கிய முகமாக இருந்த ஒருவர், தேர்தல் நேரத்தில் இப்படி திடீரென கட்சி மாறியது பிரேமலதா விஜயகாந்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இணைந்த கையோடு, வரும் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் மீசை ராஜேந்திரன் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் நேரத்தில் தேமுதிகவுக்கு இது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai