Dailyhunt
திருமணம் ஆகி 12 நாள் தான் ஆகுது. 3 பேரை மணந்து விவாகரத்து செய்த பெண். விஷம் குடித்த இளம் தொழிலதிபர். வெளியான திடுக்கிடும் தகவல்..!!!

திருமணம் ஆகி 12 நாள் தான் ஆகுது. 3 பேரை மணந்து விவாகரத்து செய்த பெண். விஷம் குடித்த இளம் தொழிலதிபர். வெளியான திடுக்கிடும் தகவல்..!!!

ர்நாடக மாநிலம் உடுப்பி அருகே நெல்யாடியைச் சேர்ந்த முப்பது வயது இளம் தொழிலதிபர் சுதீப் என்பவர் மங்களூரைச் சேர்ந்த சவுமியா என்ற பெண்ணைத் திருமணம் செய்த பன்னிரண்டே நாட்களில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒப்பனை கலைஞராகப் பணியாற்றும் சவுமியாவுக்கு இது நான்காவது திருமணம் என்பதும் ஏற்கனவே மூன்று பேரைத் திருமணம் செய்து அவர் விவாகரத்து பெற்றவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களது திருமணத்திற்குச் சுதீப்பின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுதீப் கடந்த மாதம் விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சுதீப்பின் தற்கொலைக்கு அவரது மனைவி சவுமியா கொடுத்த மன அழுத்தமே காரணம் என்று சுதீப்பின் தந்தை தாமோதர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் சவுமியா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சவுமியாவால் பாதிக்கப்பட்டதாகக் கூறி வேணு ஷெட்டி என்ற மற்றொரு இளைஞரும் அதிரடியான புகார்களை அடுக்கியுள்ளார். சவுமியா திட்டமிட்டு இளைஞர்களை ஏமாற்றிப் பணத்தைப் பறிப்பவர் என்றும் அவருடனான நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டதால் தாம் உயிர் பிழைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து சுதீப்பிற்கு முன்பே தெரியும் என்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்தை ஏற்காததே தற்கொலைக்குக் காரணம் என்றும் சவுமியா மறுப்பு தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து வெளிவரும் இத்தகைய திடுக்கிடும் தகவல்களால் இந்த வழக்கு தற்பொழுது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai