Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தோற்றத்தை வைத்துத் தீர்ப்பதா?" "ரயிலில் நடந்த இனவெறித் தாக்குதல்!" சகோதரிகளுக்கு நேர்ந்த கொடுமை.. வைரலாகும் வீடியோ..!!"

தோற்றத்தை வைத்துத் தீர்ப்பதா?" "ரயிலில் நடந்த இனவெறித் தாக்குதல்!" சகோதரிகளுக்கு நேர்ந்த கொடுமை.. வைரலாகும் வீடியோ..!!"

குவகாத்தியிலிருந்து அகர்தலா செல்லும் ரயிலில் பயணம் செய்த இரு சகோதரிகள், இருக்கை தொடர்பான தகராறின் போது இனவெறி தாக்குதலுக்கு உள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 1-ம் தேதி, அந்தச் சகோதரிகள் தாங்கள் முன்பதிவு செய்த கீழ் இருக்கையில் அமர முயன்றபோது, அங்கு ஏற்கனவே ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமித்திருந்தனர்.

இருக்கையை விட்டுத் தரும்படி அந்தச் சகோதரிகள் கோரியபோது, அவர்களது தோற்றத்தை வைத்து, 'நீங்கள் சீனாவிலிருந்து வந்தீர்களா?' என்று கேட்டு, அந்தத் தரப்பினர் அவர்களை இழிவாகப் பேசியதாகப் புகார் எழுந்துள்ளது.

இருக்கை தொடர்பான சிக்கலைத் தீர்க்க ரயில்வே ஊழியர்கள் தலையிட்ட பின்னரும், அந்தக் குடும்பத்தினர் அந்தச் சகோதரிகளிடம் தொடர்ந்து ஆக்ரோஷமாகவும் இனவெறியைத் தூண்டும் வகையிலும் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

">

இந்திய ரயில்வே விதிகளின்படி, நடு இருக்கைகளை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையில், பகல் நேரத்தில் ஏற்பட்ட இந்த அநாகரிகமான சம்பவம் மற்றும் இனவெறிப் பேச்சுக்கள் சமூகத்தில் பெரும் கண்டனத்தைப் பெற்றுள்ளன.

இத்தகைய இனவெறி துன்புறுத்தல்களை ரயில்வே நிர்வாகம் தீவிரமாகக் கையாண்டு, அனைத்துப் பயணிகளும் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்தச் சகோதரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai