Dailyhunt
"உலகிலேயே கொடுமை இதுதான்!".. தாயைத் தேடி சுடுகாட்டிற்கு வந்த பிஞ்சு குழந்தை. கலங்க வைக்கும் வீடியோ..!!!

"உலகிலேயே கொடுமை இதுதான்!".. தாயைத் தேடி சுடுகாட்டிற்கு வந்த பிஞ்சு குழந்தை. கலங்க வைக்கும் வீடியோ..!!!

காராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு மயானத்தில் பதிவான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில், மிகச் சிறிய பெண் குழந்தை ஒன்று தனது தாயின் கல்லறைக்கு அருகே அமர்ந்துள்ளது. தன் தாய் இனி உயிருடன் இல்லை என்பது கூட தெரியாத அந்தப் பிஞ்சு, அங்கிருக்கும் தாயின் புகைப்படத்தை கையில் எடுத்து அதனிடம் ஆசையாகப் பேசுகிறது.

அந்தப் புகைப்படத்திற்கு முத்தம் கொடுப்பதும், தனது கையில் இருக்கும் உணவை அந்தப் படத்திற்கு ஊட்டி விட முயற்சிப்பதுமாக அந்தச் சிறுமி செய்யும் செயல்கள் பார்ப்போரின் நெஞ்சைப் பிழிகிறது.

தனது மழலை மொழியில் அந்தப் படத்திடம் ஏதோ ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, அதனிடம் இருந்து பதில் வராதபோது அந்தப் புகைப்படத்தை இறுகக் கட்டியணைத்துக் கொள்கிறது.

இந்த உருக்கமான காட்சியை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர, தற்போது இது லட்சக்கணக்கானோரைக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. "அம்மாவின் இடத்தைத் துளியும் யாராலும் நிரப்ப முடியாது" என இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களது சோகத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai