Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"உண்மை சொல்வேன்.. போட தைரியம் இருக்கா?" மீடியாவுக்கே சவால் விட்ட எச்.வினோத்.. 'ஜனநாயகன்' ரிலீஸில் வெடித்த சர்ச்சை..!!

"உண்மை சொல்வேன்.. போட தைரியம் இருக்கா?" மீடியாவுக்கே சவால் விட்ட எச்.வினோத்.. 'ஜனநாயகன்' ரிலீஸில் வெடித்த சர்ச்சை..!!

பிரபல இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து நீண்ட நாட்களாகவே சினிமா வட்டாரத்தில் பெரும் கேள்விகள் எழுந்து வரும் நிலையில், நேர்காணல் ஒன்றில் அதுகுறித்த கேள்விக்கு எச்.வினோத் மிகவும் அதிரடியாகவும் காட்டமாகவும் பதிலளித்துள்ளார்.

"ஜனநாயகன் ரிலீஸ் என்னுடைய கைகளில் இல்லை. படத்தின் சிக்கல் தொடர்பான உண்மைகளைச் சொல்லும் அளவிற்கு எனக்குத் தைரியம் இல்லை" என்று கூறி படத்தின் பின்னால் இருக்கும் ஏதோ ஒரு பெரிய பஞ்சாயத்தை அவர் வெளிப்படையாகப் போட்டுடைத்துள்ளார்.

​மேலும் செய்தியாளர்களைப் பார்த்து சவால் விடும் தொனியில் பேசிய அவர், "அப்படியே எனக்குத் தைரியம் இருந்தாலும், அந்த உண்மைகளைத் தற்பொழுது அப்படியே வெளியிடும் தைரியம் உங்களுடைய ஊடகங்களுக்கு இருக்காது. படம் வரும்போது பார்ப்போம்" என்று மிகத் துணிச்சலாகப் பேசியுள்ளார். இயக்குநர் எச்.வினோத்தின் இந்த அதிரடிப் பேச்சு தற்பொழுது சமூக வலைதளங்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதத்தையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai