Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
​"உன்னால கேட்க முடியலனா என்ன, நான் இருக்கேன்" காதலிக்கு தியேட்டரில் சைகை மொழியில் கதை சொன்ன காதலன்: நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!

​"உன்னால கேட்க முடியலனா என்ன, நான் இருக்கேன்" காதலிக்கு தியேட்டரில் சைகை மொழியில் கதை சொன்ன காதலன்: நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!

சினிமா தியேட்டர் ஒன்றில் எடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் அதேசமயம் பேரன்பை வெளிப்படுத்தும் அழகான வீடியோ ஒன்று வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் சும்மா காட்டுத்தீ போல பரவி லட்சக்கணக்கான இதயங்களை வென்று வருகிறது.

அந்த வீடியோவில், கேட்கும் திறனற்ற தனது காதலியுடன் தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்ற காதலன் ஒருவன், திரையில் ஓடிக்கொண்டிருக்கும் 'பேபி டோ டை டோ' (Baby Do Die Do) பாடலின் வரிகளையும், படத்தின் முக்கிய டயலாக்குகளையும் சைகை மொழி (Sign Language) மூலமாகத் தனது காதலிக்குத் தத்ரூபமாக விளக்குகிறார்.

தியேட்டரில் இருக்கும் மற்றவர்களைப் போலத் தனது காதலியும் அந்த சினிமா அனுபவத்தைக் கொஞ்சமும் மிஸ் செய்யாமல் ரசிக்க வேண்டும் என்பதற்காக, அவர் செய்த இந்த அன்பான காரியம் அங்கிருந்த ஒருவர் காணொளியாக பதிவு செய்ய அது தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ​இந்த நெகிழ்ச்சியான வீடியோவை இன்ஸ்டா மற்றும் எக்ஸ் தளங்களில் பார்த்த நெட்டிசன்கள், இதுதான் "உண்மையான காதலுக்கும், அனைவரையும் உள்ளடக்கிய அன்பிற்கும் மிகச்சிறந்த உதாரணம்" என உருகிப் போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தன் காதலிக்கு எந்தவொரு தருணமும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அந்த காதலன் காட்டிய அக்கறையும், சைகை மொழியில் அவர் காட்டிய அர்ப்பணிப்பும் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. சோஷியல் மீடியாவில் லைக்குகளையும், எக்கச்சக்க ஷேர்களையும் அள்ளி வரும் இந்த கியூட் வீடியோ, இப்போதைக்கு இணையத்தின் டாப் ட்ரெண்டிங்கில் உலா வந்து கொண்டிருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai