Dailyhunt
"உத்தரப் பிரதேசத்தை இழிவுபடுத்துவதே திமுகவின் வேலை!".. நாடாளுமன்ற விவகாரத்தை போட்டுடைத்த பிரதமர் மோடி.. அனல் பறக்கும் அரசியல்..!!

"உத்தரப் பிரதேசத்தை இழிவுபடுத்துவதே திமுகவின் வேலை!".. நாடாளுமன்ற விவகாரத்தை போட்டுடைத்த பிரதமர் மோடி.. அனல் பறக்கும் அரசியல்..!!

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றுள்ளார். இரண்டாம் நாளான நேற்று காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், உத்தரப் பிரதேசத்தில் கங்கா விரைவுச்சாலையைத் திறந்து வைத்தார்.

அந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உத்தரப் பிரதேசத்திற்கு அதிகப்படியாகக் கிடைப்பதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இதற்குச் சமாஜ்வாதி கட்சியும் உடந்தையாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவதாகக் குறிப்பிட்ட அவர், திமுக தனது அரசியல் ஆதாயத்திற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai