பத்து நிமிடங்கள் இதயத் துடிப்பு நின்று, மருத்துவர்களால் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட ஒருவர் மீண்டும் உயிர் பிழைத்து வந்து தனது 'மரணத்திற்குப் பிந்தைய' அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அவர் விவரித்தபடி, உயிர் பிரிந்த அந்தச் சில நிமிடங்களில் அவர் ஒரு இருண்ட சுரங்கப் பாதை போன்ற இடத்தைக் கடந்ததாகவும், அதன் இறுதியில் பிரகாசமான ஒளி வெள்ளத்தைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு அவர் ஒருவிதமான சொல்லொண்ணா அமைதியையும் நிம்மதியையும் உணர்ந்ததாகவும், பூமிக்குரிய எந்தவொரு வலியும் கவலையும் அங்கு இல்லை என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். இந்த 'மறு உலக' அனுபவத்தில் அவர் தனது மறைந்த உறவினர்களைக் கண்டதாகவும், அவர்கள் தன்னிடம் இன்னும் உனது நேரம் வரவில்லை எனத் தெரிவித்துத் திருப்பி அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் உயிர் பெற்ற இந்தச் சம்பவம் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விஞ்ஞான ரீதியாக இவை மூளையின் இறுதி நிமிடங்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் என்று கூறப்பட்டாலும், அந்த நபர் விவரிக்கும் காட்சிகள் மற்றும் அவர் அனுபவித்த நிம்மதி ஆகியவை மரணத்திற்குப் பின் மற்றொரு உலகம் இருக்கிறதா என்ற விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.

