Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"உயிரை விட செருப்புதான் முக்கியமா?" ரயில் தண்டவாளத்தில் அசால்ட்டாக வந்த நபர்.. வைரலாகும் வீடியோ..!!

"உயிரை விட செருப்புதான் முக்கியமா?" ரயில் தண்டவாளத்தில் அசால்ட்டாக வந்த நபர்.. வைரலாகும் வீடியோ..!!

ந்திய தண்டவாளங்களில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் செய்யும் சில காரியங்கள் பல நேரங்களில் பார்ப்பவர்களை அதிர வைக்கின்றன.

அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சீறிப்பாய்ந்து வரும் அதிவேக ரயிலுக்கு மிக அருகில், ஒரு வாலிபர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். ரயில் மிக நெருக்கமாக வந்துவிட்டதை உணர்ந்தும், அவர் கொஞ்சம் கூட பதற்றப்படாமல் தண்டவாளத்தைக் கடக்க ஓடிய வேகம் பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது.

​ஆனால், அங்குதான் ஒரு ட்விஸ்ட் நடந்துள்ளது. அவர் தண்டவாளத்தைக் கடக்கும் அவசரத்தில், அவருடைய காலில் இருந்த செருப்பு ஒன்று கழன்று தண்டவாளத்திலேயே விழுந்துவிட்டது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவதை விட்டுவிட்டு, அந்த நபர் மிக அசால்ட்டாக, ரயில் எஞ்சின் அடிக்கும் தூரத்திற்குள் மீண்டும் பின்னோக்கி வந்து தனது செருப்பை கையில் எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார். "ஒன்லி இன் இந்தியா" என்ற கேப்ஷனுடன் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் பலரும், ஒரு சாதாரண செருப்பிற்காக இப்படியா உயிரைப் பணையம் வைப்பது என்று அந்த நபரின் முட்டாள்தனமான தைரியத்தைக் கண்டித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai