Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உயிருக்கு உயிரான நண்பன் செய்த துரோகம். ஆணாக சென்றவரை பெண்ணாக மாற்றிய கொடூரம். உறைந்து போன போலீஸ்.!!!

உயிருக்கு உயிரான நண்பன் செய்த துரோகம். ஆணாக சென்றவரை பெண்ணாக மாற்றிய கொடூரம். உறைந்து போன போலீஸ்.!!!

த்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் மனிதாபிமானமற்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு நபர் தனது சிறந்த நண்பனை தந்திரமாக ஏமாற்றி, மருத்துவமனையில் அனுமதித்து, அவருக்குத் தெரியாமலேயே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய வைத்துள்ளார்.

மேலும் "உனக்கு உடல்நிலை சரியில்லை" என்று கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அந்த நபர், அங்குள்ள மருத்துவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்த பாதகச் செயலைச் செய்துள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட நபர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, தனது ஆண்மை பறிக்கப்பட்டதை அறிந்து பேரதிர்ச்சி அடைந்தார்.

இந்தக் கொடுமை இத்துடன் முடிந்துவிடவில்லை. அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த 18 நாட்களுக்கு, பாதிக்கப்பட்ட நபரை அந்த "நண்பன்" ஒரு அறையில் அடைத்து வைத்துத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள அந்த நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு புனிதமான நட்பைப் பயன்படுத்தி ஒருவரின் வாழ்க்கையையே சிதைத்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai