Dailyhunt
"வண்டிய நிப்பாட்டுங்க" தம்பதி விழுந்ததைப் பார்த்ததும் பதறிய விஜய்.. உடனே இறங்கி வந்து.. வைரலாகும் அந்த ஒரு வீடியோ..!!

"வண்டிய நிப்பாட்டுங்க" தம்பதி விழுந்ததைப் பார்த்ததும் பதறிய விஜய்.. உடனே இறங்கி வந்து.. வைரலாகும் அந்த ஒரு வீடியோ..!!

திருச்சியில் இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, அவரைக் காணத் திரண்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆணும் பெண்ணும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இதைப் பார்த்த விஜய், ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காமல் தனது பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி ஓடி வந்து, கீழே விழுந்த தம்பதியைத் தாங்கிப் பிடித்துத் தூக்கிவிட்டார்.

​அவர்கள் காயமின்றி இருக்கிறார்களா என்று விசாரித்த விஜய், அவர்களைப் பாதுகாப்பாக வண்டியில் ஏற்றி அனுப்பி வைத்த பின்னரே மீண்டும் தனது வாகனத்திற்குத் திரும்பினார். அரசியலைத் தாண்டி விஜய் காட்டிய இந்த மனிதாபிமானச் செயல் அங்கிருந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியாகி காட்டுத்தீயாய் வைரலாகி வருகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai