Dailyhunt
வங்காளம் முதல் கேரளா வரை கணிப்புகள் பலித்தது.. ஆனா தமிழ்நாட்டில் மட்டும் தான் 'தளபதி' மேஜிக்! - ஆட்சியைப் பிடிக்கப்போகும் புதுக்கட்சி?

வங்காளம் முதல் கேரளா வரை கணிப்புகள் பலித்தது.. ஆனா தமிழ்நாட்டில் மட்டும் தான் 'தளபதி' மேஜிக்! - ஆட்சியைப் பிடிக்கப்போகும் புதுக்கட்சி?

மிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையில், இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்ற மாநிலங்களின் கருத்துக்கணிப்பு வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜக (194), கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி (89), மற்றும் அசாமில் பாஜக (99) என ஏப்ரல் 29-ல் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அச்சுப்பிசகாமல் அப்படியே பலித்துள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

பெரும்பாலான கணிப்புகள் திமுக அல்லது அதிமுகவே வெல்லும் என ஆரூடம் கூறிய நிலையில், 'ஆக்சிஸ் மை இந்தியா' போன்ற சில அமைப்புகள் மட்டுமே கணித்தபடி, விஜய் தலைமையிலான தவெக 110 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் விளிம்பில் உள்ளது.

118 இடங்கள் பெரும்பான்மைக்குத் தேவை என்ற நிலையில், திமுக (62) மற்றும் அதிமுக (61) கூட்டணிகளைப் பின்னுக்குத் தள்ளி, ஒரு அறிமுகக் கட்சி திராவிடக் கோட்டைகளைத் தவிடுபொடியாக்கி தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது ஒட்டுமொத்த அரசியல் உலகையும் வாயடைக்கச் செய்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai