Dailyhunt
"வங்கி கணக்கில் ₹10,000!".. ரேஷன் கடையில் இனி இதுவும் கிடைக்குமா..? அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்..? எடப்பாடியின் மெகா அறிவிப்பு..!!

"வங்கி கணக்கில் ₹10,000!".. ரேஷன் கடையில் இனி இதுவும் கிடைக்குமா..? அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்..? எடப்பாடியின் மெகா அறிவிப்பு..!!

மிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜோலார்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், குடும்ப அரசியல் மற்றும் நான்கு அதிகார மையங்களின் பிடியில் தமிழ்நாடு சிக்கியுள்ளதாகவும் கடுமையாகச் சாடினார்.

திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், மக்களின் வரிப்பணத்தை உயர்த்தி அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக் காரணமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், ரேஷன் கடைகளில் தரமான அரிசி, விலையில்லா பருப்பு மற்றும் எண்ணெய் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

மேலும், மகளிருக்கான உதவித்தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும், குடும்பங்களுக்கு விலையில்லா பிரிட்ஜ் வழங்கப்படும், கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் மற்றும் வங்கித் கணக்கில் 10,000 ரூபாய் செலுத்தப்படும் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அவர் முன்வைத்தார். இந்தத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் 'மூடுவிழா' நடத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai