உலக பாதுகாப்பு சந்தையில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், சீனா தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான J-35AE-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அதிநவீன போர் விமானத்தின் முதல் வாடிக்கையாளராக பாகிஸ்தான் இருக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 40 போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதற்காக பாகிஸ்தானிய விமானிகளுக்குச் சீனாவிலேயே சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வான்வெளியில் சீனாவின் இந்த அதிரடி ஆதிக்கம் மற்றும் பாகிஸ்தானுடனான இந்த ராணுவக் கூட்டணி சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

