இன்றைய தின நிகழ்வுகள்
939 - இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார்.1275 - ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது.
1644 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இடம்பெற்றது.
1682 - பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது.
1795 - எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்துகொள்ளப்பட்டது.
1806 - பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர்.
1810 - மேற்கு புளோரிடாவின் முன்னாள் எசுப்பானியக் குடியேற்றங்களை அமெரிக்கா இணைத்துக் கொண்டது.
1867 - கரிபால்டியின் படைகள் ரோம் நகருள் புகுந்தன.
1870 - 140,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்சு நகரில் இடம்பெற்ற போரில் புருசியாவிடம் சரணடைந்தனர்.
1904 - முதலாவது சுரங்க நியூயார்க் நகர சப்வே பாதை திறக்கப்பட்டது. இதுவே ஐக்கிய அமெரிக்காவில் மிகப் பெரியதும், உலகில் மிகப் பெரிய சுரங்கப் பாதைகளில் ஒன்றும் ஆகும்.
1907 - அங்கேரியில் செர்னோவா என்ற இடத்தில் கிறித்தவக் கோவிலில் வழிபாட்டின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
1914 - முதலாம் உலகப் போரில் பிரித்தானிக் கடற்படை முதலாவது தோல்வியைச் சந்தித்தது. ஓடாசியசு என்ற போர்க்கப்பல் அயர்லாந்தின் வடமேற்கே செருமனியின் கண்ணிவெடித் தாக்குதலில் மூழ்கியது.
1922 - தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில் இணைய ரொடீசியாவில் இடம்பெற்ற பொதுவாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
1924 - உஸ்பெக் சோவியத் குடியரசு சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.
1936 - திருமதி வாலிசு சிம்ப்சன் மணமுறிவு பெற்றார். இது அவருக்கு இங்கிலாந்தின் மன்னர் எட்டாம் எட்வர்டைத் திருமணம் புரிய வழிவகுத்தது. இத்திருமணத்தால் எட்டாம் எட்வர்டு முடிதுறக்க நேரிட்டது.
1958 - பாக்கித்தானின் முதலாவது அரசுத்தலைவர் இஸ்காண்டர் மிர்சா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு இராணுவத் தலைவர் அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1961 - நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 ஏவூர்தியை விண்ணுக்கு ஏவியது.
1961 - மூரித்தானியா, மங்கோலியா ஆகியன ஐக்கிய நாடுகள் அவையில் சேர்ந்தன.
1962 - கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில் அமெரிக்காவின் யூ-2 விமானம் சோவியத் தயாரிப்பு நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1971 - காங்கோ மக்களாட்சிக் குடியரசு சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1973 - 1.4 கிகி விண்வீழ்கல் கொலராடோவின் கேனன் நகரைத் தாக்கியது.
1979 - செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1981 - பனிப்போர்: சோவியத் நீர்மூழ்கி ஒன்று சுவீடனின் கிழக்குக் கரையில் மூழ்கியது.
1982 - யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது.
1990 - வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முசுலிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
1991 - துருக்மெனிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1999 - ஆர்மீனிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
2005 - பாரிசில் இரண்டு முசுலிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.
2007 - காங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் உயிரிழந்து, 100 பேர் காயமடைந்தனர்.
2014 - 2002, சூன் 20 இல் ஆரம்பிக்கப்பட்ட எரிக் இராணுவ நடவடிக்கையை முடித்துக் கொண்டு பிரித்தானிய இராணுவம் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறியது.
2017 - காத்தலோனியா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

இன்றைய தின பிறப்புகள்
1782 - நிக்கோலோ பாகானீனி, இத்தாலிய இசைக்கலைஞர் (இ. 1840)1855 - இவான் விளாதிமீரொவிச் மிச்சூரின், உருசியத் தாவரவியலாளர் (இ. 1935)
1858 - தியொடோர் ரோசவெல்ட், அமெரிக்காவின் 26வது குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1919)
1904 - ஜத்தீந்திர நாத் தாஸ், இந்திய விடுதலைப் போராளி, புரட்சியாளர் (இ. 1929)
1911 - பதே சிங், சீக்கிய சமய, அரசியல் தலைவர் (இ. 1972)
1920 - கே. ஆர். நாராயணன், இந்தியாவின் 10வது குடியரசுத் தலைவர் (இ. 2005)
1932 - சில்வியா பிளாத், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1963)
1941 - சிவகுமார், தமிழக நடிகர்
1942 - மாவை சேனாதிராஜா, இலங்கை அரசியல்வாதி, ஈழ செயற்பாட்டாளர்
1945 - லுலா ட சில்வா, பிரேசிலின் 35வது அரசுத்தலைவர்
1946 - இவான் ரியட்மேன், செக்-கனடிய நடிகர்
1952 - ரொபேர்டோ பெனினி, இத்தாலிய நடிகர், இயக்குநர்
1968 - திலீப், மலையாள நடிகர்
1977 - குமார் சங்கக்கார, இலங்கைத் துடுப்பாளர்
1985 - சுனிதா ராவ், இந்திய-அமெரிக்க டென்னிசு வீராங்கனை
1986 - டேவிட் வார்னர், ஆத்திரேலிய துடுப்பாளர்

இன்றைய தின இறப்புகள்
1449 - உலுக் பெக், பாரசீக வானியலாளர், சுல்தான் (பி. 1394)1605 - அக்பர், முகலாயப் பேரரசர் (பி. 1542)
1845 - சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1785)
1930 - எல்லன் காயேசு, அமெரிக்கக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1851)
1982 - ழான் ஃபில்லியொசா, பிரான்சிய இந்தியவியலாளர், தமிழறிஞர் (பி. 1906)
2001 - மரகதம் சந்திரசேகர், இந்திய அரசியல்வாதி (பி. 1917)
2002 - வாழப்பாடி ராமமூர்த்தி, தமிழக அரசியல்வாதி (பி. 1940)
2011 - எல். ஐ. சி. நரசிம்மன், தமிழகத் திரைப்பட நடிகர்
2019 - அபூ பக்கர் அல்-பக்தாதி, இசுலாமிய அரசுத் தலைவர் (பி. 1971)

இன்றைய தின சிறப்பு நாள்
விடுதலை நாள் (செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1979)
