பிரபல பின்னணிப் பாடகியும் நடிகையுமான ஸ்வாகதா கிருஷ்ணன், சினிமாவில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களை அண்மையில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
ஆரம்பகாலத்தில் பட வாய்ப்புகளுக்காகப் பலரிடம் போராடியபோது, சிலர் தவறான கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அவற்றைத் தவிர்த்துவிட்டுத் தனது திறமையை மட்டுமே நம்பி உழைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் உள்ள ஒரு முன்னணி இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் பணியாற்றியபோது, அங்கு ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், தான் கடுமையான பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளானதாகவும் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த அத்துமீறல்களை ஆன்மீகத்தின் பெயரால் அந்த இசையமைப்பாளர் நியாயப்படுத்த முயன்றது தனக்கு மிகுந்த மனவேதனையை அளித்ததாக ஸ்வாகதா கூறியுள்ளார். இத்தகைய சூழலில் இருந்து தப்பிக்கவும், நிம்மதி தேடவும் அவர் சினிமாவை விட்டே விலகி ரிஷிகேஷில் குடியேறினார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக அங்கேயே தங்கி துணி வியாபாரம் செய்து வருவதாகவும், தனது வாழ்க்கையில் நேர்ந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவங்களை நினைத்து அவர் அந்தப் பேட்டியில் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.

