Dailyhunt
வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு.. தங்க மோதிரத்துடன் ஊர்ந்து சென்று. அதிர்ச்சியில் பொதுமக்கள். கேரளாவில் நடந்த வினோதம்.!!!

வீட்டிற்குள் புகுந்த விஷப்பாம்பு.. தங்க மோதிரத்துடன் ஊர்ந்து சென்று. அதிர்ச்சியில் பொதுமக்கள். கேரளாவில் நடந்த வினோதம்.!!!

கேரளாவில் வெயில் தகித்து வருவதால், குளிர்ச்சியைத் தேடி பாம்புகள் ஊருக்குள் புகுவது வாடிக்கையாகிவிட்டது.

ஆனால், காசர்கோடு மாவட்டம் அடூர் பகுதியில் நடந்த சம்பவம் சற்று வித்தியாசமானது. அங்குள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த பாம்பு, அங்கிருந்த மேசை மீது ஊர்ந்து சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மேசை மீது இருந்த தங்க மோதிரம் ஒன்று பாம்பின் உடலில் இடையில் சிக்கிக் கொண்டது.

தன் உடம்பில் மோதிரம் இருப்பதை அறியாமல் அந்தப் பாம்பு வீட்டுக்குள்ளேயே சுற்றித் திரிந்ததைக் கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் லாவகமாக பாம்பைப் பிடித்தனர். பின்னர் அதன் உடலில் சிக்கியிருந்த மோதிரத்தைப் பத்திரமாக அகற்றிவிட்டு, பாம்பை அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர்.

"பாம்பு நகை திருட வந்ததா?" என அப்பகுதி மக்கள் நகைச்சுவையாகப் பேசி வரும் நிலையில், இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai