Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை!" பக்கத்து வீட்டுக்காரரின் கொடூரமான தொல்லை.. பெற்றோரிடம் சொல்லியும் பலனில்லை.. கண்ணீருடன் புகார் அளித்த பெண்..!!"

"வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை!" பக்கத்து வீட்டுக்காரரின் கொடூரமான தொல்லை.. பெற்றோரிடம் சொல்லியும் பலனில்லை.. கண்ணீருடன் புகார் அளித்த பெண்..!!"

கான்பூர் பர-2 பகுதியில் வசிக்கும் பூமி சிங் ரத்தோர் என்ற இளம் பெண், தனது அண்டை வீட்டுக்காரரின் மகனான நைதிக் கட்டியார் என்பவரால் நீண்ட நாட்களாகத் துன்புறுத்தப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண் வீட்டின் மாடியிலோ அல்லது வெளியே செல்லும்போதோ, அந்த நபர் ஆபாசமான சைகைகளைச் செய்வதாகவும், சீட்டியடித்துத் தன்னைத் தொந்தரவு செய்வதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, தான் சைக்கிளில் செல்லும்போது அந்த நபர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து மிரட்டுவதாகவும், இதைப் பற்றி அவனது பெற்றோரிடம் புகார் கூறியபோது, அவர்கள் மாறாக அந்தப் பெண்ணின் குடும்பத்தாரையே திட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக பர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கான்பூர் நகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

">

இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai