Dailyhunt
விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. 2 மணி நேரம் கேட்டால் 1 மணி நேரமா?. போலீஸ் போட்ட முட்டுக்கட்டையா?.. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா..!!

விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. 2 மணி நேரம் கேட்டால் 1 மணி நேரமா?. போலீஸ் போட்ட முட்டுக்கட்டையா?.. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா..!!

மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னையில் இன்று மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் மற்றும் தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டிருந்தார்.

மேலும் இதற்காகத் காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், மிகக் குறுகிய கால அளவிலேயே பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தியாகராய நகரில் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால், அந்த நேரத்திற்குள் முழுமையாகப் பிரச்சாரத்தை முடிக்க இயலாது என்ற காரணத்தினால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகத் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா காவல்துறை மற்றும் ஆளுங்கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விஜய் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கும் நோக்கிலேயே காவல்துறை அதிகாரிகள் ஒரு சார்பாகச் செயல்படுவதாகவும், இதற்குத் திமுக அரசு கொடுக்கும் அழுத்தமே காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai