தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய்க்கு, இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதனால் விஜய்யின் இந்த அதிரடி வெற்றி குறித்துப் பேசிய அஸ்வின், "மக்களாட்சியின் உன்னதமான வலிமையே மக்களின் தீர்ப்புதான் இந்த முறை உலகெங்கிலும் இருந்து ஏராளமான மக்கள் தமிழகம் வந்து வாக்களித்தது ஜனநாயகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றை மெய்ப்பிக்கிறது," என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
">
மேலும், இந்த வெற்றி ஒரு மிகப்பெரிய வாய்ப்பையும் அதே சமயம் பொறுப்பையும் விஜய்க்கு வழங்கியுள்ளதாக அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார். "தமிழகத்தின் இளம் தலைமுறையினரும் பொதுமக்களும் விஜய் மீது அளவுகடந்த நம்பிக்கையை வைத்து ஒரு மாபெரும் பொறுப்பை அவர் வசம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த புதிய பயணத்தில் அவருக்கு இறையருள் எப்போதும் துணையாக இருக்கட்டும்," என்று தனது வாழ்த்துச் செய்தியில் அஸ்வின் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் திராவிட அரசியல் பிம்பங்களை உடைத்து புதிய அரசியலை நோக்கி நகரும் விஜய்க்கு, விளையாட்டுத் துறையிலிருந்து கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

