Dailyhunt
விஜய்க்கு காங்கிரஸ் வைத்த செக்!  'இதை' பண்ணுங்க". ஆதரவு தர டெல்லி மேலிடம் விதித்த அதிரடி கண்டிஷன்..!!

விஜய்க்கு காங்கிரஸ் வைத்த செக்! 'இதை' பண்ணுங்க". ஆதரவு தர டெல்லி மேலிடம் விதித்த அதிரடி கண்டிஷன்..!!

மிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்காமல் தவிக்கும் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவளிக்கக் காங்கிரஸ் கட்சி படுஉஷாராகச் சில அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளதாக டெல்லி மற்றும் சத்தியமூர்த்தி பவன் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

"எக்காரணத்தைக் கொண்டும் பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை தவெக பெறவே கூடாது; முற்றிலும் மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவோடு மட்டுமே விஜய் தமிழ்நாட்டில் புதிய ஆட்சியை அமைக்க வேண்டும்" என்று காங்கிரஸ் மேலிடம் மிகக் கடுமையான செக் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்தியில் பாஜகவுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணியை முன்னெடுத்துச் செல்லும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதே பாலிசியைக் கடைப்பிடிக்க ராகுல் காந்தி மற்றும் கார்கே தலைமையிலான காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இந்த மதச்சார்பற்ற 'செக்மெட்' நிபந்தனை, அனைத்துத் தரப்பு ஆதரவையும் திரட்டி எப்படியாவது முதலமைச்சர் நாற்காலியில் அமரத் துடிக்கும் தவெக தலைவர் விஜய்க்குப் புதிய அரசியல் நெருக்கடியையும், அதே நேரத்தில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai