Dailyhunt
"விஜய்யின் வேகம்.. பவுன்சர்களின் ரியாக்‌ஷன்!" - எலக்ஷன் நேரத்திலும் குறையாத சினிமா ஸ்டைல்.. வைரலாகும் சூப்பர் வீடியோ..!!

"விஜய்யின் வேகம்.. பவுன்சர்களின் ரியாக்‌ஷன்!" - எலக்ஷன் நேரத்திலும் குறையாத சினிமா ஸ்டைல்.. வைரலாகும் சூப்பர் வீடியோ..!!

திருநெல்வேலி தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செய்த ஒரு "மாஸ்" செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திறந்த வேனில் நின்றபடி விஜய் மக்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் விஜய்யின் தாகத்தைத் தீர்ப்பதற்காக ஜூஸ் பாட்டில் ஒன்றைத் தூக்கி வீசினார்.

அதைக் கவனித்த விஜய், சற்றும் பதறாமல் மிக லாவகமாக ஒற்றைக் கையில் அந்த பாட்டிலை "கேட்ச்" பிடித்தார். இதைப் பார்த்த பின்னால் நின்றிருந்த பவுன்சர்கள், விஜய்யின் இந்தத் துரிதமான செயலையும் அவரது பழைய சினிமா ஸ்டைலையும் நேரில் பார்த்த உற்சாகத்தில் சிரித்தபடி கொடுத்த கியூட் ரியாக்‌ஷன் வீடியோவில் பதிவாகியுள்ளது.

"தன்னுடைய வேகம் இன்னும் குறையவில்லை" என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த வீடியோவை, த.வெ.க தொண்டர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai