Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"விளையாடத் தெம்பு வேணும்னா முதல்ல சோறு வேணும்பா!". அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்குப் பதிலடி கொடுத்த இயக்குநர் கஸ்தூரி ராஜா. பரபரப்பு மேடைப் பேச்சு.!!!

"விளையாடத் தெம்பு வேணும்னா முதல்ல சோறு வேணும்பா!". அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்குப் பதிலடி கொடுத்த இயக்குநர் கஸ்தூரி ராஜா. பரபரப்பு மேடைப் பேச்சு.!!!

சென்னையில் நடைபெற்ற தனியார் கல்வி அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரபல திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜா, "விவசாயத்தை விட விளையாட்டுதான் ரொம்பக் கடினம்" என்று முன்னதாகக் கருத்துத் தெரிவித்திருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துப் பேசியிருப்பது தற்பொழுது கோட்டை வட்டாரத்திலும் சோசியல் மீடியாவிலும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.

"விவசாயம்தான் இந்த நாட்டின் உண்மையான உயிர்நாடி, நம்ம கஷ்டப்பட்டுச் சோறு சாப்பிட்டால்தான் மைதானத்தில் இறங்கி விளையாடவே உடம்பில் தெம்பு கிடைக்கும்" என விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்தை மேடையிலேயே உடைத்துத் தூக்கியுள்ளார் கஸ்தூரி ராஜா.

அதுமட்டுமின்றி, தற்போதைய காலகட்ட மாணவர்களிடையே அதிகரித்து வரும் தடம்மாறும் காதல் கலாச்சாரம், பள்ளிச் சிறுவர்களிடம் அராஜகமாகப் பரவி வரும் போதைப் பழக்கம் மற்றும் பெண்களின் மதுப்பழக்கம் ஆகிய தற்போதைய சமூகச் சீர்கேடுகள் குறித்துத் தனது ஆழ்ந்த வேதனையையும் கவலையையும் அவர் அந்த மேடையில் பதிவு செய்துள்ளார்.

அமைச்சரின் பேச்சுக்கு எதிராகக் கிளம்பியுள்ள இந்த மெகா அதிரடி தற்பொழுது இணையத்தில் நெட்டிசன்களின் ஏகோபித்த ஆதரவோடு வைரலாகி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai