சமூக வலைதளங்களில் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஒரு சுவாரஸ்யமான வீடியோ தீயாய் பரவி வருகிறது.
டி-சர்ட் விற்பனை செய்யும் பெண் ஒருவரிடம் வாடிக்கையாளர் ஒருவர் விலையை விசாரிக்கும்போது நடந்த உரையாடல் தான் இந்த வைரலுக்குக் காரணம். அந்த நபர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் டி-சர்ட் விலையைக் கேட்க, அந்தப் பெண் தலா 200 ரூபாய் என்று கூறுகிறார்.
ஆனால், எம்.எஸ்.தோனியின் டி-சர்ட் விலையை மட்டும் 500 ரூபாய் என்று கூறியது அந்த நபருக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மற்ற டி-சர்ட்களை விட தோனியின் டி-சர்ட் மட்டும் ஏன் இவ்வளவு அதிக விலை என்று அந்த நபர் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்தப் பெண் சற்றும் யோசிக்காமல், "தோனி அவர்கள் எல்லாருக்கும் 'பாதர்' (Father)" என்று மிகவும் மாஸாகப் பதில் அளித்தார்.
இந்தப் பதிலைக் கேட்ட தோனி ரசிகர்கள் உற்சாகமடைந்து அந்த வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சாதாரண டி-சர்ட் விற்பனையில் கூட தோனியின் மீதான மவுசு குறையவில்லை என்பதைக் காட்டும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.

