Dailyhunt
"விருப்ப மனு அளித்த 60 பேரும் அந்தத் தொகையைத் திரும்பக் கேட்கவில்லை என்றும்". ஆனால் 50 ஆயிரம் காலி. மநீம கொடுத்த 'ஷாக்' விளக்கம்.!!!

"விருப்ப மனு அளித்த 60 பேரும் அந்தத் தொகையைத் திரும்பக் கேட்கவில்லை என்றும்". ஆனால் 50 ஆயிரம் காலி. மநீம கொடுத்த 'ஷாக்' விளக்கம்.!!!

மிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அக்கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த நிர்வாகிகள் செலுத்திய 50,000 ரூபாய் கட்டணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், இது தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிகள் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து செலுத்தப்பட்ட அந்தத் தொகை திருப்பித் தரப்பட மாட்டாது என்றும், அது ஏற்கனவே கட்சியின் நிதியாகக் கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விருப்ப மனு கட்டணம் என்பது எப்போதும் திருப்பித் தரக்கூடிய ஒன்று அல்ல என்பது கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் முன்பே தெரிந்த ஒன்றுதான் என்று மநீம தரப்பில் கூறப்பட்டுள்ளது. "விருப்ப மனு அளித்த 60 பேரும் அந்தத் தொகையைத் திரும்பக் கேட்கவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும்" அக்கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai