தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு தொகுதியிலும் அனல் பறக்கும் போட்டிகள் நிலவி வரும் நிலையில், திண்டிவனம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) வேட்பாளர் வன்னி அரசு அதிரடி வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே அதிமுக மற்றும் விசிக இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், இறுதிக்கட்ட சுற்றுகளின் முடிவில் வன்னி அரசு வெற்றியைத் தட்டிப்பறித்தார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அர்ஜுனனை விட சுமார் 785 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று, ஒரு திரில் வெற்றியை வன்னி அரசு பதிவு செய்துள்ளார். இந்தத் தொகுதியில் 'தமிழக வெற்றி கழகம்' சார்பில் போட்டியிட்ட சக்திவேல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் விசிக பதிவு செய்துள்ள முதல் வெற்றி இது என்பதால், கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் வன்னி அரசுக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நூலிழை வெற்றி திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

