Dailyhunt
"யார் பக்கம் தப்பு?"..அமெரிக்க மக்களுக்கே நேரடியாக கடிதம் எழுதிய ஈரான் அதிபர்.. ஆட்டம் காண வைத்த அதிரடி லெட்டர்!

"யார் பக்கம் தப்பு?"..அமெரிக்க மக்களுக்கே நேரடியாக கடிதம் எழுதிய ஈரான் அதிபர்.. ஆட்டம் காண வைத்த அதிரடி லெட்டர்!

மெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் அமெரிக்க மக்களுக்கு ஒரு உருக்கமான பகிரங்கக் கடிதத்தை எழுதியுள்ளார்.

அதில், போர் என்பது இரு நாடுகளுக்கும் தேவையற்ற அழிவையே தரும் என்றும், அமெரிக்க மக்கள் தங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் எப்போதுமே எந்த ஒரு நாட்டின் மீதும் முதலில் போரைத் தொடுத்ததில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இப்போது நடக்கும் மோதல்களுக்கு இஸ்ரேலின் தூண்டுதலே முக்கிய காரணம் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" (America First) என்ற கொள்கை உண்மையிலேயே கடைபிடிக்கப்படுகிறதா? அல்லது இஸ்ரேலுக்காக அமெரிக்க வரிப்பணமும் ராணுவ வீரர்களும் பலியாக்கப்படுகிறார்களா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே, ஈரான் போர் நிறுத்தத்திற்கு கெஞ்சி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தக் கடிதம் பார்க்கப்படுகிறது.

மோதல் பாதையைத் தேர்ந்தெடுப்பது வரும் கால சந்ததியினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றே இதற்குத் தீர்வு என்றும் பெஷேஷ்கியன் தனது கடிதத்தில் ஒரு ஃபார்முலாவை முன்வைத்துள்ளார்.

ஈரானை ஒரு அச்சுறுத்தலாகக் காட்டி ஆயுத விற்பனையைப் பெருக்குவதே சில சக்திகளின் நோக்கம் என்றும், இதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரானின் இந்தத் திடீர் நகர்வு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai