Friday, 22 Jan, 12.16 pm Seithi.com

அரசியல் செய்திகள்
`தமிழக ஆளுநருக்கு ஒரு வாரம் டைம்!'- பேரறிவாளன் விடுதலையில் உச்சநீதிமன்றம் அதிரடி

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்குப் பதில் ஆளுநரே முடிவு செய்வார். இது தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரமுள்ளதாக தெரிவித்தார். பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாளில் முடிவு எடுப்பார் என்றும் மேத்தா வாதிட்டார்.

இதனைதொடர்ந்து, பேரறிவாளனின் மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகலில் குழப்பமான பதில் இருப்பதாக கூறி, பேரறிவாளன் தரப்பில் மீண்டும் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டது. மேலும், பேரறிவாளனின் மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு பதிலாக இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Seithy.com
Top