Friday, 07 Dec, 2.17 am SparkTV Tamil

செய்திகள்
ஒரு ரூபாய் நாணயத்தின் உண்மையான மதிப்பு என்ன தெரியுமா..? கேட்ட ஆடிப்போயிருவீங்க..!

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தாறுமாறாகக் குறைந்திருக்கும் நிலையில், இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தும் ரூபாய் நாணயங்களைத் தயாரிக்க எவ்வளவு செலவாகிறது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாணயங்களுக்கும் சரி ரூபாய் நோட்டுகளும் சரி அதனைத் தயாரிக்கக் கணிசமான தொகை செலவாகிறது. தற்போது சந்தையில் போலி ரூபாய் மற்றும் நாணயங்கள் அதிகளவில் வரும் காரணத்தால் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு தன்மையை மேம்படுத்த திட்டமிட்டு வருகிறது.

பாதுகாப்பு தன்மையை மேம்படுத்தும் போது அதன் உற்பத்தி செலவும் அதிகரிக்கும். இதன் படி ஒரு ரூபாய் நாணயத்தை அச்சடிக்க 1.11 ரூபாய் செலவு ஆகிறதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சொல்லப்போனால் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களின் மதிப்பை விடவும் அதிக உற்பத்தி செலவாகும் ஒரு நாணயமென்றால் 1 ரூபாய் தான்.

இதேபோல் 2 ரூபாய் நாணயத்தை உற்பத்தி செய்ய 1.28 ரூபாயும், 5 ரூபாய் நாணயத்தைத் தயாரிக்க 3.69 ரூபாயும், 10 ரூபாய் நாணயத்தைத் தயாரிக்க 5.54 ரூபாய்ச் செலவாகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: SparkTV Tamil
Top