Thursday, 07 Nov, 9.01 pm Sportstwit

முகப்பு
இந்தியாவுக்கு இக்கட்டான இலக்கு.. சமன் செய்யுமா இந்தியா?

இந்தியா வங்கதேசம் இரு அணிகளும் ஆடிவரும் இரண்டாவது t20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இருக்கின்றது

இந்நிலையில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணிக்கு துவக்க வீரர்களான லிட்டன் தாஸ் (29) மற்றும் நைம் (36) இருவரும் நல்ல துவக்கம் கொடுத்து ஆட்டமிழத்தனர்.

முதல் போட்டியில் அசத்திய ரஹீம் இம்முறை 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன் மஹ்மதுல்லா (30), அபிப் (6) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது வங்கதேச அணி.

சுழல் பந்துவீச்சாளர்கள் சஹால் 2 விக்கெட்டுகளும், சுந்தர், கலீல் அஹமது, சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

154 ரன்கள் எடுத்தால் தொடரை சமன் செய்யலாம் என்ற முனைப்பில் இந்திய அணி களமிறங்க இருக்கிறது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Sportswit
Top