Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஆர்சிபியை முடிச்சு விட்டது திருப்தியா இருக்கு.. விராட் பாய் அதை செஞ்சும் ஜெயிச்சதுதான் சிறப்பானது - சுப்மன் கில் கருத்து

ஆர்சிபியை முடிச்சு விட்டது திருப்தியா இருக்கு.. விராட் பாய் அதை செஞ்சும் ஜெயிச்சதுதான் சிறப்பானது - சுப்மன் கில் கருத்து

Swag Sports Tamil 2 weeks ago

நேற்று குஜராத் அணி ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி சிறப்பாக ஆரம்பித்தாலும் கூட 155 ரன்னில் சுருண்டது. ராபாடா வீசிய இரண்டாவது ஓவரில் விராட் கோலி ஐந்து பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்தார். ஆனால் திருப்பி வந்த குஜராத் அணிக்கு கில் பவர் பிளேவில் அதிரடியான துவக்கம் தந்து வெற்றி பெற வைத்தார்.

திருப்தியாக இருக்கிறது

இந்த வெற்றி குறித்து சுப்பன் கில் பேசும்போது " இந்த மாதிரி ஆடுகளத்தில் எதிரணியை 160 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது மிகவும் திருப்தியாக உள்ளது. பாராட்டு எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு சேரும். இந்த போட்டியில் வெற்றிக்கு பீல்டிங் முக்கிய காரணமாக இருந்தது. சில போட்டிகளாக எங்களுக்கு பீல்டிக் சரியாக அமையாமல் இருந்து வந்தது"

"உண்மையில் நான் பவர் பிளேவில் அதிரடியாக விளையாட வேண்டும் என்கின்ற எண்ணத்துடன் இல்லை. முதல் பந்து என்னை கொஞ்சம் சிரமப்படுத்தியது. அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்தேன். எனவே இது என்னுடைய நாளாக இருக்கலாம் என்று துணிந்து விளையாடினேன்"

இவர் முக்கியமான வீரர்

"மேலும் இந்த போட்டியில் விராட் பாய் ரபாடா வீசிய இரண்டாவது ஓவரில் 20 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆரம்பித்தார். ஆனால் நாங்கள் அதற்குப் பிறகு போராடி போட்டிக்குள் வந்து அவர்களை கட்டுப்படுத்தியது திருப்தியான விஷயமாக இருக்கிறது"

கில் எங்களை பிரச்சனை பண்ணிட்டார்.. பாயிண்ட் டேபிள் முக்கியம் கிடையாது.. இதுதான் முக்கியம் - ரஜத் படிதார் பேச்சு

"திவாட்டியா எங்களுக்கு முக்கியமான வீரர். அவர் போட்டியை முடித்து வைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. டைம் அவுட்டில் நாங்கள் அதைக் குறித்து பேசினோம். சில விக்கெட்டுகளை வேகமாக இழந்தோம். கடைசியில் அவர் ரன்கள் எடுத்தார். ஒட்டு மொத்தமாக எல்லோரும் களம் இறங்கி விளையாட ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது" என்று கூறி இருக்கிறார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Swag Sports Tamil