இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது.
நாட்டிங்காமில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் அதிகபட்சமாக 70 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி இங்கிலாந்து வீரர்களின் பௌலிங்கை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி 76 ரன்கள் மட்டுமே எடுத்து 175 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இதனால் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இந்திய அணி தொடரை இழக்காமல் இருக்க அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்த போட்டி குறித்து இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் போது " இது மிகவும் மோசமான ஆட்டம் என்று நான் கருதுகிறேன். இதைவிட சரியான வார்த்தை வேறு எதுவாக இருக்கும் என்று என்னால் கூற முடியாது. இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் தோல்வி அடைவதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே முதலில் இருந்து ஆராய்ந்து ஆட்ட உத்திகளை மாற்றி தோல்விக்கான காரணிகளை கண்டறிய வேண்டும். இந்த ஆடுகளத்தை பொருத்தவரை 200 ரன்கள் எடுக்கக்கூடியதாக நான் நினைக்கவில்லை. மேலும் நாங்கள் பேட்டிங் செய்த விதத்தில் தொடக்கத்தில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு மோசமாக அமைந்தது. எனவே நமது திட்டங்களை மாற்றி மீண்டும் புதியதாக வரவேண்டும்' என்று பேசி இருக்கிறார்.

